இந்தியாவின் கோடீஸ்வர வேட்பாளர்!
Nov 17, 2025, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் கோடீஸ்வர வேட்பாளர்!

Web Desk by Web Desk
Apr 23, 2024, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சொத்து விவரங்கள் பலரையும் ஆச்சரிய பட வைத்திருக்கிறது. அவரது சொத்து மதிப்புகள் எவ்வளவு என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .

ஆந்திர மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் சந்திரசேகர். இவர் வேட்புமனு தாக்கல் செய்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று சமர்ப்பித்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 785 கோடி எனத் தெரிவித்துள்ளார்.

அவர் பெயரில் 2448 கோடியே 72 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். தனது மனைவி கோனேரு ஸ்ரீரத்னா பெயரில் 2343 கோடியே 78 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாகவும், குழந்தைகள் பெயரில் ஆயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது குடும்பத்துக்கு Line of Credit , லைன் ஆஃப் கிரெடிட் வகையில் அமெரிக்காவின் JPMorgan Chase & Co. ஜேபி மோர்கன் சேஸ் வங்கியின் பொறுப்பில் ரூ.1,138 கோடி உள்ளதாக கூறியுள்ளார். யாரப்பா இந்த ஆள் என்று தானே கேட்கத் தோன்றுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 1999 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டம் பெற்றுள்ள சந்திரசேகர், மேற்படிப்பை அமெரிக்காவில் படித்து முடித்து ,தொழில் ரீதியாக புகழ்பெற்ற மருத்துவராக விளங்குகிறார்.

அமெரிக்காவில் மெடிக்கல் லைசென்ஸ் பெறுவதற்கான The United States Medical Licensing Examination (US MLE) எம்எல்ஈ தேர்வில் வெற்றி பெற இந்திய மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்தார்.

அது மட்டுமில்லாமல் பல்வேறு வணிகத் துறைகளில் ஈடுபட்டு, வருகிறார். சந்திர சேகரின் பெரும்பாலான சொத்துக்கள் அமெரிக்காவில் இருக்கிறது என்றாலும் 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து மட்டும் அவருக்கு ரூ 3.68 லட்சம் ஆண்டு வருமானம் வந்ததாகவும் அதே ஆண்டில் அவரது மனைவியுடன் சேர்ந்து முதலீடு செய்த வகையில் 605.5 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர் அசையும் சொத்துக்களின் அடிப்படையில் பல்வேறு முதலீடுகள் உட்பட 2,316 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளார் என்றால் அவரது மனைவி .2,289 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களை வைத்துள்ளார். இது தவிர, உலகெங்கிலும் கிட்டத்தட்ட 101 நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கிறார்கள்.

கணிசமான செல்வம் மற்றும் செல்வாக்கு இருந்தபோதிலும், சந்திரசேகர் மீது எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. வரும் மே 13ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் . சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

ஆந்திராவில் உள்ள குண்டூர் மக்களவைத் தொகுதியில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) கே.வெங்கட ரோசய்யாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சந்திரசேகர், போட்டியிடுகிறார்.

Tags: India's millionaire candidate!
ShareTweetSendShare
Previous Post

பிரஷர் பம்புகள் பறிமுதல்!

Next Post

கொளுத்தும் கோடை! – ஏசி விற்பனை உயர்வு…!

Related News

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies