தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக, தேர்தல் நடைபெறும் நாள் அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பீகார், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, அவர்களது சொந்த மாநிலம் செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாள் அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.