தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், கட்டிட தொழிலாளியான இவர் சிவந்திபட்டி பாலம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெங்கடேஸ்வரனின் உடலை கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி வெங்கடேஸ்வரனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.