வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இண்டி கூட்டணி மவுனம் காப்பது ஏன் என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும், முக்கிய நிர்வாகியுமான தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்கள் குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், இவ்விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இண்டி கூட்டணி மவுனம் காப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமல்லாமல் வாக்காளர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.