சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தோகாவில் இருந்து வந்த இளைஞரிடம் இருந்து 11 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு 11 கோடி ரூபாய் ஆகும். போதைப் பொருள் கடத்தி வந்த இளைஞர் யார், அவருடன் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.