சித்ரா பௌர்ணமியை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், தடுப்புகளை தள்ளிவிட்டு பக்தர்கள் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், சித்ரா பவுர்ணமியை ஒட்டி பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் பேரி கார்டுகளை தள்ளிவிட்டு சண்முக விலாச மண்டபத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கு பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.