பினராயி -ராகுல் முற்றும் வார்த்தை போர்! -
Mar 23, 2026, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பினராயி -ராகுல் முற்றும் வார்த்தை போர்! –

Murugesan M by Murugesan M
Apr 24, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராகுல் ஒரு முதிர்ந்த அரசியல்வாதியே இல்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், பாஜகவுடன் உள்ள நெருக்கத்தால் பினராயி விஜயன் கைது செய்யப்படவில்லை என காங்கிரஸ் பதில் அளித்துள்ளது. இதனால், கேரள அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. அங்கு நடப்பது என்ன? என்பது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி இண்டியா கூட்டணியை உருவாக்கி இருந்தாலும் , நாட்டின் பல மாநிலங்களில் இண்டியா கூட்டணி இல்லை என்றே சொல்ல வேண்டும் .

கேரளாவைப் பொறுத்தவரை , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் . அவரை எதிர்த்து சிபிஎம் தலைவர் ஆனி ராஜா போட்டியிட அறிவிப்பு வந்ததில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டிற்கும், காங்கிரசுக்கும் இடையே வார்த்தை போர் தொடங்கியது .

அதன் உச்சக் கட்டமாக ‘வரவிருக்கும் தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் காங்கிரசுக்கு வாக்களிப்பதில் எந்த பயனும் இல்லை ‘என்றும், குறிப்பாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தபோது காங்கிரஸ் அதனை ஆதரித்தது என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் , குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்றும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்ட போதும் ராகுல் காந்தி வாயே திறக்கவில்லை என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் மிகக் கடுமையாக பேசிய பினராயி விஜயன், ஆர்.எஸ். எஸ் கொள்கைகளுடன் காங்கிரஸ் ஒத்துப் போகிறது என்றும், சங் பரிவார் மன நிலையே ராகுல் இடம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதன் உச்சக் கட்டமாக , ராகுல் ஒரு முதிர்ந்த அரசியல் வாதியே இல்லை என்றும் கடுமையாக குற்றஞ் சாட்டியிருந்தார் பினராயி விஜயன்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி , பினராயி விஜயன் 24 மணிநேரமும் தம்மை மட்டுமே எதிர்க்கிறார் என்றும், பாஜகவை அவர் எதிர்ப்பதே இல்லை என்றும் பதிலடி கொடுத்தார். அப்படி எதிர்த்து இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை மோடி அரசு சிறையில் அடைத்திருக்கும் என்றும் விஜயனை கைது செய்யாதது ஏன் ? என்றும் ராகுல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

காந்தி என்ற பெயரை உச்சரிப்பதற்குக்கூட யோக்கியதை இல்லாத ஆளாக ராகுல் மாறிவிட்டார் என்றும் கேரளத்துக்கு வந்து பாஜகவுக்கு ஆதரவு நிலைபாட்டை ராகுல் காந்தி எடுத்திருப்பது அவரது அரசியல் பக்குவமற்ற தன்மையையே காட்டுகிறது என்று சி பி எம் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.அன்வர், ராகுலின் உரைக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.

தேர்தல் பிரசாரம் தொடங்கியதிலிருந்தே ராகுல் காந்தியை விமர்சிப்பது மட்டும் தான் பினராயி விஜயனின் பிரதான லட்சியமாக இருந்தது. இது பா.ஜ.க-வுடன் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

தாம கூட பயன்படுத்தாத வார்த்தைகளை பயன்படுத்தி ராகுல் காந்தியை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சிக்கிறார் என்று பிரதமர் மோடி சொல்லி இருந்தார் என்றும், ராகுல் காந்தி மட்டுமல்ல அந்த குடும்பத்தையும் அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் வரும் 26ஆம் தேதி வாக்குபு்பதிவு நடைபெற உள்ள நிலையில் இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தை போர் உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் கேரளா அரசியலில் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது .

Tags: Pinarayi-Rahul FIGHT Complete word war!
ShareTweetSendShare
Previous Post

W.H. சங்கர சுப்பிரமணியன் நினைவு அஞ்சலி கூட்டம்!

Next Post

மணல் கொள்ளை ஊழலில் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு தொடர்பு : அமித் ஷா

Related News

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது வான் வழி தாக்குதல்!

தவெக-வை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

மேலூர் சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர பரப்புரை – 18 பட்டி அம்பலகாரர்களிடம் ஆதரவு திரட்டினார்!

ராம நவமி கொண்டாட்டம் – ஒரு லட்சம் நெல்மணிகள் மூலம் ராமர்சிலை வடிவமைப்பு!

ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை – சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு : மதுரை நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

புதுச்சேரியில் தவெக தனியாக போட்டி – வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல் – தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை!

அயோத்தியில் ராம நவமி..பலரையும் வெகுவாக கவர்ந்த ராமர் சிலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies