வசமாகுமா அதிமுக? சசிகலாவின் கடித ரகசிய பின்னணி!
Mar 23, 2026, 07:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வசமாகுமா அதிமுக? சசிகலாவின் கடித ரகசிய பின்னணி!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 07:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக தொண்டர்கள் மற்றும் தமது ஆதரவாளர்களுக்கு விண்ணப்ப படிவம் ஒன்றை அனுப்பி இருக்கிறார் சசிகலா. இதன் மூலம் அதிமுகவை தமது தலைமையின் கீழ் கொண்டு வர சசிகலா முயற்சிகளை தொடங்கியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணி என்ன? என்பதை அலசும் ஒரு செய்தி தொகுப்பு .

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிச் சாமி தலைமையிலான அதிமுக பின்னடைவை சந்திக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனால் அதிமுக தொண்டர்களின் கோபத்துக்கு எடப்பாடி பழனிச் சாமி ஆளாகலாம் என்றும், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் இழந்து மாற்று வழியைத் தேடும் நிலை ஏற்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதனால், தேர்தல் முடிவுக்கு பிறகு ஏற்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி அதிமுகவைக் தன் வசத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சசிகலா திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாக தெரியவருகிறது.

அதற்காக , புதிய விண்ணப்பப் படிவம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும், அதனை தனது ஆதரவாளர்களுக்கும்,அதிமுக தொண்டர்களுக்கும் அனுப்பி, பூர்த்தி செய்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி என்ன விண்ணப்பம் என்று தானே கேட்கிறீர்கள்? அதிமுக தொண்டர்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் ,தங்கள் பெயர், முகவரி தொலைபேசி எண், ஆதார் எண், தாங்கள் சார்ந்திருக்கும் ஒன்றியம், சட்டமன்ற தொகுதி, கல்வி தகுதி, வயது, வகுப்பு, கட்சியில் இணைந்த ஆண்டு, 2017 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அன்று கட்சியில் வகித்த பொறுப்பு, தற்போது இதர அமைப்பில் செயல்படுபவராக இருந்தால், அந்த அமைப்பின் பெயர் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சசிகலாவின் முகாம் அலுவலகமான 95, ஜெயலலிதா இல்லம், போயஸ் கார்டன், சென்னை 86 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நேரிலோ அல்லது கடிதம் மூலமோ அனுப்ப முடியாதவர்கள் ஆன் லைன் மூலமாகவும் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்ற வகையிலேயே இந்த வேண்டுகோளை அவர் அனுப்பி இருக்கிறார். வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தனக்கான ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து கொண்டு ,அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கலாம் என்ற முடிவில் சசிகலா இருப்பதாக சொல்லப் படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, அதிமுகவில் இணைந்து செயல்படும் முடிவில் இருந்தபோதிலும், அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. சசிகலா கட்சிக்குள் வருவதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

எடப்பாடிக்கு எதிரான சட்டப் போராட்டம் நடத்திய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தனி தனியே பாஜகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் தன்னோடு இணைத்து கொண்டு அதிமுகவை தன் வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சசிகலா தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சசிகலா தன் ஆட்டத்தைத் தொடங்குவார் என்று சொல்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.

வாக்கு எண்ணிக்கைக்கு பின் தவறு செய்தவர் திருந்துவார் என்று பெயர் குறிப்பிடாமல் எடப்பாடி பழனிசாமியை சுட்டிக் காட்டி சசிகலா பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. அதனால், தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Will AIADMK succeed? Sasikala's letter secret background!
ShareTweetSendShare
Previous Post

பணிந்த பதஞ்சலி கடிவாளம் போட்ட உச்சநீதிமன்றம்!

Next Post

ஷெங்கன் விசா என்றால் என்ன?

Related News

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies