கர்நாடகாவில் குறிப்பிட்ட நாளிதழ்களில் பாஜக குறித்து தவறான விளம்பரங்களை காங்கிரஸ் கட்சியினர் செய்து வருவதாக தேர்தல் ஆணையத்திடன் பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை விதித்து வரும் நிலையில், கர்நாடகவில் விநியோகம் செய்யப்படும் குறிப்பிட்ட நாளிதழ்களில் மத்திய அரசு குறித்தும், பாஜக குறித்தும் தவறான முறையில் சித்தரித்து விளம்பரங்கள் வெளியாகுவதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜகவினர் புகார் தெரிவித்தனர்.
மேலும் வாக்காளர்களின் மனநிலையை கெடுக்கும் வகையில் விளம்பரங்கள் உள்ளதாகவும், வெற்று வாக்குறுதி என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகுவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவின் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.