புதுச்சேரி அருகே மதுபோதையில் இருந்த நபரை, தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
பழைய பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் மீது அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மணவெளி பகுதியிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திய அலெக்ஸ் போதை தலைக்கு ஏறியதால், அங்கேயே படுத்து உறங்கியுள்ளார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ரவுடியான வெங்கடேஷையும் அவரது கூட்டாளிகள் மூவரையும் கைது செய்தனர்.
இளையராஜா என்பவரை அலெக்ஸ் கத்தியால் குத்தியது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், காலாபட்டு சிறையில் அடைத்தனர்.