காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நரசிம்ம ஜெயந்தியை ஒட்டி இந்த கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக நரசிங்க சுவாமிக்கு அபிஷேக அலாங்காரத்துடன் தீப ஆராதணை நடத்தப்பட்டது.
பின்னர் அரக்கு நிற பட்டாடையுடன் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் சுவாமி திரு ஊஞ்சலில் எழுந்தருளினார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.