நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தை திருடி, உதிரி பாகங்களை பிரித்து, கிணற்றுக்குள் மறைத்து வைத்த நபர் சிக்கினார்.
நாமக்கல் மாவட்டம் வாழவந்தி கோம்பை பகுதியில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது யமஹா இருச்சக்கர வாகனம் காணாமல் போன புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்கப்பதிவு செய்து, சி.சி.டி.வி. கேமரா உதவியோடு தேடி வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன வாகனத்தை திருடிவர் காரவள்ளியை சேர்ந்த மெக்கானிக் சுப்பிரமணி என்பது தெரியவந்தது.
மேலும், கிணற்றுக்குள் மறைத்து வைத்திருந்த இருசக்கர வானத்தையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.