உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான 126 வது மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காவை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே 17 முதல் 22-ஆம் தேதி வரை 126 வது மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளது.
இதனையடுத்து பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் 15 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பூங்காவில் புல்வெளி மைதானங்களை சீரமைக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.