சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு கர்ப்பிணி பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது பெயர் சுமதி என்பதும், காரைக்குடி வள்ளுவர் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது.
ஏற்கனவே இரண்டு முறை திருமணமான சுமதிக்கு facebook மூலமாக தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளரான சிவக்குமாருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதில் கர்ப்பமான சுமதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவக்குமாரிடம் கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனவே சிவக்குமாரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி சுமதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.