மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மூன்று நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி – திருமுல்லவாசல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.