உதகை மலை ரயில் தினம் ஜூலை 15ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு மலை ரயில் செல்லும் காட்சிகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தால் நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ரயில்வே நிர்வாகம் கூடுதலாக மலை ரயில்களை இயக்கி வருகிறது.
தொடர்ந்து ஜூலை 15 ம் தேதி மலை ரயில் தினம் கொண்டாப்படுவதை முன்னிட்டு மலை ரயில் செல்லும் டிரோன் காட்சிகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.