தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியதில் லாரி ஓட்டுநர் உட்பட மூவர் காயமடைந்தனர்.
மதுரையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த டேங்கர் லாரி ஒன்று, வடக்கு நாயக்கன் பேட்டை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பழைய இரும்புக் கடை மற்றும் மின் கம்பங்கள் மீது மோதியது.
இதில் லாரி ஓட்டுனரும், இரண்டு உதவியாளர்களும் படுகாயமடைந்தனர். அருகிலிருந்த பொதுமக்கள், மூவரையும் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.