கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி எருதாட்ட விழா நடைபெற்றது.
திம்ஜேப்பள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றியுள்ள பெர்னூர், குட்டூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சேர்ந்து 33 ஆண்டுகள் கழித்து அம்மனுக்கு திருவிழா நடத்தினர்.
இதனை ஒட்டி ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி,தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு எருதாட்ட விழா கோலாகலமாக நடத்தப்பட்டது.