கேரளாவில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் உள்ளிட்டவை கொண்டு செல்லும் பணி தீவிரமடைந்துள்ளன.
மக்களவைத் தேர்தல் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 -ஆம் தேதி 89 தொகுதிகளில் நடைபெறுகிறது. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. தேர்தலுக்கு தேவையான மெழுகு வர்த்தி உள்ளிட்ட 21 பொருட்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில், தேர்தலுக்கு தேவையான பொருட்கள் போலீசார் மற்றும் துணை ராணுவப்படை துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.