குஜராத் மாநிலம் நாடியாத் அருகே புல்லட் ரயில் ரயில் திட்டத்திற்கான 2-ம் கட்ட இரும்புப் பால பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை – அகமதாபாத் இடையே நாட்டின் முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இத்திட்டத்திற்காக நாடியாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 100 மீட்டர் நீளமுள்ள இரும்புப் பாலப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
ஆயிரத்து 486 மெட்ரிக் டன் இரும்பைக் கொண்டு, புஜ் மாவட்டத்திலுள்ள பணிமனையில் இந்தப் பாலத்திற்கான பாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, முதற்கட்டமாக சூரத் பகுதியில் 130 மீட்டர் நீளத்திற்கான தண்டவாளப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.