தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு பாறைப்பட்டியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி – சீதாலட்சுமி தம்பதி, இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று கருப்பசாமி உலக்கையால் சீதாலட்சுமியை அடித்து கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சீதாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கருப்பசாமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.