ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்திரன் மகளான தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமானுக்கு, இங்குதான் இந்திரன் சீதனமாக வெள்ளை யானையை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
சித்திரை திருவிழாவை ஒட்டி, மங்களநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது சங்கு நாதங்கள், மங்கள இசை முழங்க, வழி நெடுகிலும் தீபாராதனை காண்பித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.