நாகை மாவட்டம் கல்லாரில் உள்ள 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காரணக்கடல் ஹலிபத்து ஷெய்கு முகையதீன் ரீபாயி தர்காவின் கந்தூரி விழாவை ஒட்டி சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெற்றது.
மின் விளக்குக்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹலிபத்து ஷெய்கு முகையதீன் ரீபாயி நினைவிடத்தில் சந்தனம் பூசும் வைபோகம் நடைபெற்றது.
முன்னதாக, கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரிபாயி தரிக்கா எனப்படும் கத்தி விளையாட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு துவா செய்தனர்.