புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது பிரதே பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
முத்தியால்பேட்டையை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த மார்ச் இரண்டாம் தேதி மாயமானார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடி வந்தனர். அப்போது, அதே பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிறுமி உடல் பிரதே பரிசோதனை செய்த ஜிப்மர் மருத்துவமனை அதன் அறிக்கையினை போலீசாரிடம் வழங்கியுள்ளது.
அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.