அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகி விளக்கம்!
Sep 13, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகி விளக்கம்!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 06:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக தஞ்சை, திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மணல் குவாரி உரிமையாளர்கள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்கள்,மணல் குவாரிகள் உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை சோதனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, முறைகேடுகள் நடந்ததாக கரூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பலருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், அமலாக்கத்துறையின் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார், தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப், அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா, கரூர் ஆட்சியர் தங்கவேல், வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

இவர்களிடம் செயற்கை கோள் மூலம் பெறப்பட்ட புகைப்படங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடைபெற்றதோடு எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்கள் அளித்த விவரங்கள் வீடியோவிலும், பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags: 5 District Collectors appeared in the enforcement office and explained!
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி!

Next Post

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies