அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்ற விவசாயி, பொட்டக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரிடம், தனது நிலத்தை அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
வட்டியுடன் சேர்த்து 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை செலுத்திய பிறகும், ரங்கநாதனின் நிலத்தைத் தர பாரி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
அங்கிருந்த காவலர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.