பீகாரில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் காலை சுமார் 11 மணி அளவில் தீப்பிடித்தது.
இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஹோட்டலில் சிக்கி இருந்த 20க்கும் மேற்பட்டோரை அவர்கள் மீட்டனர்.