இந்தியாவுல இப்போ தேர்தல் பிரச்சாரத்துக்கு ஈடா சூடு பிடிக்கிற ஒரு களம் தான் ஐபிஎல். உலக கோப்பைய விட ஐபிஎல் மேட்ச்க்கு தான், மவுசு அதிகம். இதுக்கு காரணம் ஒன்னு நம்ம மண்ணுல எல்லா நாட்டு வீரர்களும் திரண்டு விளையாடுறது, இன்னொன்னு சினிமா பிரபலங்களோட ஈடுபாடு.
ஐபிஎல் ஆரம்பிச்சு 17 வருஷங்கள் ஆச்சு. இது ஆரம்பிச்சப்போ இருந்த ஹைப்புக்கும், இப்போ இருக்கிற ஹைப்புக்கும் துளி அளவு கூட வித்தியாசம் இல்ல..
ஒவ்வொரு நாட்டோட favourite வீரர்களும் இந்தியாவுல, நம்ம favourite அணியில் விளையாடும் போது எவ்ளோ சந்தோசம் இருக்கும்.. அதே வீரர, நமக்கு புடிச்ச சினிமா நட்சத்திரம் ஆதரிச்சு அவங்களுக்கும் நம்மள மாதிரியே ஒரு அணிய பிடிச்சிருந்தா?? அது டபிள் சந்தோசம் அப்படின்னு தான சொல்லணும்…
அட மேட்ச் பாக்க வர்ரது மட்டும்னு இல்லாம, சில அணிகளோட நிறுவனர்களே சினிமா நட்சத்திரங்கள் தான்… உதாரணத்துக்கு சொல்லனும்னா கே கே ஆர் அணியோட நிறுவனர் ஷாருக்கான்…
பஞ்சாப் கிங்ஸ் நிறுவனர் பிரீத்தி ஜிந்தா…
ஏன், சன் ரைசர்ஸ் அணி நிறுவனர் கூட, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் தான்…
இப்படிதான் 17வது சீசன் வர ஐபிஎல்லுக்கான பப்ளிசிட்டி சினிமா பிரபலங்களோட ஒன்றிணைந்து இருக்கு .
சென்னை அணியில் தல தோனி விளையாடும் போது, அத ரசிக்க வரக்கூடிய சினிமா நட்சத்திரங்கள் அன்னைக்கு டிரெண்ட் ல இருக்கிறத நாம பார்த்திருப்போம்…
கிரிக்கெட் வீரர்கள தாண்டி சினிமா பிரபலங்கள உள்ள கொண்டுவரும் போது இருக்குற ப்ளஸ் என்னன்னா தனக்கு பிடிச்ச நடிகரோ, நடிகையோ குறிப்பிட்ட வீரருக்கு பாளோவர்ன்னா அப்போ கிரிக்கெட் பாக்காதவங்க கூட தனக்கு பிடிச்ச திரை பிரபலங்களுக்காக பாலோவர் ஆகிடுறாங்க.
இதுமட்டுமில்லங்க பிரபலங்கள் ஸ்டேடியத்துக்கு வரது, க்யூட் எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கிறது, கிரிக்கெட் வீரர்கள் கொடுக்கிற போஸ், டான்ஸ்ன்னு மைதானத்துக்குள்ள வர ரசிகர்களுக்கு நான் ஸ்டாப் என்டர்டயின்மென்ட் கிடைக்கிறது.
மார்ச் 22ல தொடங்கி மே 26 வரைக்கும் மொத்தமா 74 போட்டிகளில் நமக்கு பிடிச்ச அணிகள் விளையாடுதோ இல்லையோ எந்த திரைபிரபலங்கள் ஸ்டேடியத்துக்கு வராங்கன்றத பாக்க ரொம்ப ஆர்வமா தினம் தினம் இருக்கோம். அமிதாப், தனுஷ், சூர்யா, ஜோதிகா, சாலினி, திரிஷா இப்படி பிரபலங்கள் வரும்போது மேட்ச பாக்குறதா… இல்ல நடிகர்கள் யாருக்கு சப்போர்ட் பன்றாங்கன்னு யாருக்காக ரொம்ப ஆர்வமா கைய தட்டுறாங்கன்றத பாக்குறதான்னே தெரியல. மேட்ச் முடிஞ்சதும் வர மீம்ஸ் தான் அடுத்த மேட்ச் வர்ற வரைக்கும் ட்ரெண்டிங்.
இறுதி போட்டில எப்போமே சூப்பர் ஸ்டார், மற்ற மாநில பிரபலங்கள்னு கிரிக்கெட் பாக்க வரது வழக்கம். அதே போல இந்த வருஷம் மே 26ம் தேதி நடக்குற பைனல் மேட்ச்ல எந்தெந்த பிரபலங்கள் வர போறாங்கன்றது ரொம்ப பெரிய எதிர்பார்ப்பா இருக்கு.
ஒட்டு மொத்தமா கிரிக்கெட் + சினிமா 100 சதவீதம் என்டர்டயிண்மெண்ட் கிடைக்கும்றதுல எந்த ஒரு சந்தேகமு இல்ல. இப்ப புரியுதா நம்ம ஏன் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு சொல்றோம்ன்னு.