உலக மலேரியா விழிப்புணர்வு தினத்தையொட்டி விருத்தாசலம் நகராட்சியில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 25 -ஆம் தேதி உலக மலேரியா விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், விருத்தாசலம் நகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது, அவர்கள் மலேரியாவை வரும் 2027 -ம் ஆண்டு முற்றிலுமாக ஒழிப்போம் என்றும், 2030 -ம் ஆண்டு மலேரியா இல்லாத நாடு என்ற இலக்கினை அடைவோம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.