நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 9-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65 புள்ளி 5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையிலேயே பிரசாரம் ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.