மக்களவைத் தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடக உள்ளிட்ட 13 மாநிலங்களில் காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அனைத்து வாக்காளர்களும் சாதனை செய்யும் அளவு வாக்குப்பதிவு செய்யுமாறும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் எனவும் பிரதம மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Urging everyone in constituencies voting today, in the second phase of the Lok Sabha elections, to participate in record numbers. A high voter turnout strengthens our democracy. I especially urge our young voters and women voters to turn out in great numbers. Your vote is your…
— Narendra Modi (@narendramodi) April 26, 2024
மேலும் உங்கள் வாக்கு உங்கள் குரல் எனவும் அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.