கேரளாவின் திரிசூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கினை செலுத்தினார்.
நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
அந்தவகையில் கேரளாவின் திரிசூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். இந்நிலையில் திரிசூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சுரேஷ் கோபி வாக்களித்தார்.