அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு இடங்களிலும், கல்வி வளாகங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் போராட்டத்தை கைவிடாமல் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.