வீட்டுப் பணிப் பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீது சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
அண்மையில், நேஹாவின் நகைகள் காணாமல் போனது. இது தொடர்பாக அவரது வீட்டுப் பணிப்பெண் லட்சுமி உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், லட்சுமி வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக, லட்சுமியின் மகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.