ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்தில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்களும், பட்டிதார் 50 ரன்களும் எடுத்தனர்.
207 ரன்களை இலக்காக கொண்டு ஆட்டத்தை தொடங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.