அர்ஜெண்டினாவில் தாவர உண்ணி டைனோசர் வாழ்ந்ததற்கான பற்கள் மற்றும் எழும்புத் துண்டுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அர்ஜெண்டினாவில் உள்ள தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் புதிய பள்ளதாக்கு மற்றும் முகடுகள் போன்ற இடங்களில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாவர உண்ணி வகை டைனோசரின் எலும்பு பாகங்கள் மற்றும் பற்களை கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் அதிகாரிகள் அவற்றை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து மேலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் மாதிரி புகைப்படத்தை வெளியிட்ட அதிகாரிகள், 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்த வகை டைனோசர் தாவர உண்ணி வகையிலானது என தெரிவித்தனர்.