தேனி அருகே தங்க நகைகளுக்காக ஐந்து பெண்களை கொலை செய்த நபருக்கு ஐந்து முறை ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த நடராஜன், வீட்டில் தனியாக உள்ள பெண்களை குறிவைத்து, அவர்களிடம் இருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து வந்தார்.
எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கொலை செய்துள்ளார். இதில், மூன்று கொலை வழக்குகளில் நடராஜனுக்கு, மூன்று முறை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், தங்கம்மாள் மற்றும் சுருளியம்மாள் ஆகியோரது கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
இந்த இரண்டு வழக்குகளிலும் நடராஜனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தேனி மாவட்ட நீதிமன்ற வரலாற்றில், ஒரே குற்றவாளிக்கு ஐந்து முறை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.