மயிலாடுதுறையில் தலைமை காவலரை காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சாராயம் கடத்தி சென்ற மர்ம கும்பலை பிடிக்க முயன்ற, காவல்துறை தலைமை காவலர் ரவிச்சந்திரன் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன், சங்கர், ராமமூர்த்தி, கருணாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.