தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் குட்கா பொருட்களை விற்பனை செய்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கோமதிபுரத்தில் உள்ள கடையில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 135 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் விற்பனையில் ஈடுபட்ட தாய் மற்றும் மகனையும் போலீசார் கைது செய்தனர்.