தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் குளம் போல் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி காமராஜர் நகரில் தனிநபர் ஒருவர், பொது கழிவுநீர் பாதையை அடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தெருக்களில் குளம் போல கழிவுநீர் தேங்கியதால் குடியிருப்புவாசிகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.