தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரிசி கடத்தல் விவகாரத்தில் பயிற்சி வழக்கறிஞரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் அடித்த விவகாரத்தில், பயிற்சி வழக்கறிஞர் மாரிசெல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இவ்விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து தனிப்படை அமைத்து குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பாம்பு கார்த்திக் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் வலைவீசு தேடி வருகின்றனர்.