சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே, பெண்களை தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்ததற்காக, போதையில் 12 பேரை சரமாரியாக வெட்டிய 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருமுல்லைவாயில் அருகிலுள்ள கணபதி நகர் பகுதியில் அபினேஷ், விஷ்ணு, முத்து ஆகிய மூன்று இளைஞர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாயிலில் அமர்ந்து, மது மற்றும் கஞ்சா போதையில் பெண்களை தரக்குறைவாகப் பேசியுள்ளனர்.
இதனை அப்பகுதியில் வசிப்பவர்கள் தட்டிக் கேட்டதற்காக 3 பெண்கள் உட்பட 12 பேரை சரமாரியாக வெட்டினர். இதனைத் தொடர்ந்து, அபினேஷ் மற்றும் விஷ்ணுவைக் கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள முத்துவைத் தேடி வருகின்றனர்.