சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கியாஸ் சிலிண்டர்கள் எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஆங்காங்கே காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா செல்லும் மக்கள் தங்கள் வாகனங்களில் கியாஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தடையை மீறி எடுத்துச் சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் இருந்து கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.
இனி இதுபோன்ற சம்பவம் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.