குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை எளிதில் கண்டறிய QR கோடு ஸ்டிக்கர் ஒட்டி சிதம்பரம் போலீசார் அசத்தியுள்ளனர்.
சிதம்பரம் நகரத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
குற்ற வழக்கு தொடர்பான வாகனங்களின் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து அதிலிருந்து QR கோடு ஸ்டிக்கர் தயாரித்து அதை இரு சக்கர வாகனத்தின் முன்புறம் ஒட்டி வைத்துள்ளனர்.
செல்போனில் இருந்து QR கோடை ஸ்கேன் செய்து பார்த்தால் அதன் அனைத்து விவரங்களும் செல்போன் திரையில் வந்து விடுகிறது. இதனால் குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்களின் விபரங்களை மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும்.