வி.வி.பேட் தொடர்பான வழக்கில் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் வி.வி.பேட் தொடர்பாக தனிநபர் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அப்போது விவிபேட் தொடர்பான வழக்கில் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மின்னணு வாக்கு இயந்திர வாக்குகளை, விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்பதையும், மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தனர்.