சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் மக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 710 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில் தற்போது 6 ஆயிரத்து 755 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒரு சவரன் தங்கம் 360 ரூபாய் உயர்ந்து, 54 ஆயிரத்து 40 ருபாயாக விற்கப்படுகிறது.
இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 88 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 88 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.