திருவள்ளூர்மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வட காஞ்சி என்றழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலின் திருப்பணிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டது.
இந்நிலையில் யாக கலச பூஜைகளுடன், ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கலச நீர் ராஜகோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.