சென்னை திருவல்லிக்கேணியில் ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள் பற்றி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீலம் பாஷா தர்கா பகுதியில் வசித்து வந்த ஜீவிதா என்ற சிறுமி கடைக்கு சென்றுகொண்டிருந்தபோது மாடு முட்டியதில் காயம் அடைந்தார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியில் கால்நடைகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.