நெல்லை மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அருவியில் 4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக, மணிமுத்தாறு அருவியில் இருந்த தடுப்புக் கம்பிகள் சேதமாகின.
சீரமைப்புப் பணிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல் பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
4 மாதங்களுக்குப் பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.