சென்னை விமான நிலையக் கழிவறையில், குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றே கால் கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகைப் பகுதியில் உள்ள கழிவறையை ஊழியர்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கிருந்த குப்பைத் தொட்டியில் பார்சல் ஒன்று கிடந்ததைக் கண்ட ஊழியர்கள், விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த பார்சலை பிரித்துப் பார்த்த போத்து அதனுள் ஒன்றே கால் கிலோ எடையுள்ள 4 தங்கக் கட்டிகள் இருந்தன.
அதன் மதிப்பு 90 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து அதிகாலை சென்னைக்கு வந்த விமானத்தில் இந்த தங்கம் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.